என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆஸ்திரேலியா இந்தியா தொடர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா தொடர்"
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3-வது ஆண்டாக அதிக ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli #TeamIndia
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3-வது ஆண்டாக அதிக ரன் குவித்து சாதனை படைத்து இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி ஆகிய 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து இந்த ஆண்டு அவர் 2653 ரன் எடுத்துள்ளார். 69.81 சராசரி வைத்துள்ளார்.
2016-ம் ஆண்டு 2595 ரன்னும், 2017-ம் ஆண்டு 2818 ரன்னும் எடுத்து இருந்தார். தொடர்ந்து அவர் 3 ஆண்டுகளாக ரன் வேட்டையில் முதல் இடத்தை தக்க வைத்து அசத்தி வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டைவிட தற்போதைய மெல்போர்ன் ‘பிட்ச்’ உயிரோட்டமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் முடிவுகள் கிடைத்தன. மெல்போர்ன் ஆடுகளம் கடந்த சில வருடங்களாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும், போட்டிகளில் முடிவு கிடைக்காமல் ‘டிரா’விலேயே முடிந்துள்ளன.
இந்திய அணி கடந்த 2014-ம் ஆண்டு மெல்போர்னில் விளையாடியபோது, உயிரோட்டமில்லாத ஆடுகளமாக இருந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 192 ரன்களும், ரியாஸ் ஹாரிஸ் 74 ரன்களும், கிறிஸ் ரோஜர்ஸ் 57 ரன்களும், பிராட் ஹட்டின் 55 ரன்களும், ஷேன் வாட்சன் 52 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி (169), ரகானே (147) ஆகியோரின் சதத்தால் 465 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்தபோது விராட் கோலி (54), ரகானே (48) அட்டத்தால் இந்தியா போட்டியை டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. உள்ளூர் தொடரில் அதிக அளவில் சதங்கள் விளாசப்பட்டன.
இதனால் நாளை தொடங்கும் போட்டியிலும் முடிவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நேற்று ஆடுகளத்தை பரிசோதித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தற்போதைய ஆடுகளம் உயிரோட்டமாக இருக்கிறது. முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய மெல்போர்ன் ஆடுகளம் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் ஆடுகளத்தை நேற்று பார்த்தபோது, அதன் அடிப்பகுதி உலர்ந்து காணப்பட்டது. ஆனால், மேற்பகுதி புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இது அப்படியே இருக்க வேண்டும். இந்த புற்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பந்து வீச போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கடந்த முறையை (2014) விட தற்போதைய ‘பிட்ச்’ போதுமான அளவு உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.
முதல் இரண்டு போட்டிகளில் ஆடுகளம் என்ன செய்ததோ, அதை இந்த ஆடுகளமும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போதும் நாங்கள் வெற்றியை எதிர்நோக்கிதான் செல்வோம்’’ என்றார்.

வார்த்தைப் போர் விளையாட்டின் ஒரு பகுதி, அது கட்டாயம் இருக்க வேண்டும் என்று 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் சாய்த்த முகமது ஷமி தெரிவித்துள்ளார். #AUSvIND
தென்ஆப்பிரிக்கா தொடரின்போது ஆஸ்திரேலியா அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது. இந்த விவகாரத்தால் பான்கிராப்ட் 9 மாதம் தடையும், வார்னர் மற்றும் ஸ்மித் 12 மாதத்தடையும் பெற்றுள்ளனர்.
இந்த பிரச்சினையால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு களங்கம் ஏற்பட்டதாக நிர்வாகிகள் எண்ணினார்கள். இதனால் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடரின்போது வீரர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது ஸ்லெட்ஜிங் ஏதும் இல்லை. ஆனால் தற்போது பெர்த்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் இரு அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். பொதுவாக இரு அணி கேப்டன்களான டிம் பெய்ன் மற்றும் விராட் கோலி ஒருவருக்கொருவர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்குநேர் மோதும் சூழ்நிலைக்கூட ஏற்பட்டது. நடுவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.
இன்று ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது, மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் இழக்கவில்லை. உணவு இடைவேளைக்குப்பிறகு முகமது ஷமி அபாரமாக பந்து வீசினார். ஒரு கட்டத்தில் 192 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுக்கள் என இருந்த ஆஸ்திரேலியா, 207 ரன்னிற்குள் 9 விக்கட்டுக்களை இழந்தது. 5 விக்கெட்டில் நான்கு விக்கெட்டுக்களை ஷமி சாய்த்தார்.
இவரது பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இன்றைய ஆட்டத்திற்குப்பின் முகமது ஷமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘ஸ்லெட்ஜிங் விளையாட்டின் ஒரு அங்கம். அது கட்டாயம் இருக்க வேண்டும்’’ என்றார்.

×

X